December 2nd Week CA – 2019

Share:

உலகம்


மிக இளைய பிரதமர்

  • வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் 34 வயது சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 10-ம் தேதி பதவி ஏற்ற இவர் தான் உலகிலேயே மிகவும் இளைய வயது உடையவர்.
  • 2015 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்.
  • பின்லாந்து வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் பிரதமராகப் பொறுப்பை ஏற்பவர் என்ற பெருமையும், மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் போரிஸ் ஜான்சன்

  • இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனில் டிசம்பர் 12 இல் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றது.
  • அந்த கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
  • பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி மருமகன் ரிஷி கணக்  கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
  • தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரீத் கவுர் கில் பிரிட்டனின் முதல் சீக்கிய எம்.பி. என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து  நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா

  • உலகம் முழுவதுமான விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பணிகளை செய்யும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தை (ஐசிஏஓ) ஐக்கிய நாடுகள் சபையால் 1944 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் 7 தேதி 1996 ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச விமான போக்குவரத்து தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா


குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  • குடியுரிமை திருத்த மசோதா 2019 மத்திய உள்துறை அமைச்சர் டிசம்பர் 9 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அன்றைய தினமே மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது. இதையடுத்து 13.12.19 அன்று குடியரசுத் தலைவர் இம்மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார்
  • இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம் எடுத்துரைத்துள்ளது.
  • வெளிநாடுகளிலிருந்து பயண ஆவணம் இல்லாமல் இந்தியாவில் குடியேறியவர்கள் அல்லது விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என குடியுரிமைச் சட்டம் 1955 இல் கூறப்பட்டுள்ளது. இதில் தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய ஹிந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
  • குடியேறிய நாளிலிருந்து 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கலாம் என 1955 ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அதை தற்போது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது

நாடாளுமன்ற 250வது கூட்டத்தொடர்

  • நான்கு வாரங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13ல் நிறைவு பெற்றது.
  • நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டதொடர் கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இது மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத்தொடர் என்பது தனிச்சிறப்பாகும். இந்தக் கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பதால் மாநிலங்களவை செயல்பட்ட விதம் குறித்து அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு டிசம்பர் 13ல் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
  • கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மாநிலங்களவை 104 சதவீதத் திறனுடன் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டது. குளிர்காலக் கூட்டத்தொடரில் இது ஏறத்தாழ 100 சதவீதமாக இருந்தது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில், மாநிலங்களவையின் அடுததடுத்த கூட்டத்தொடர்கள் 100 சதவீதத் திறனுடன் செயல்பட்டுள்ளன. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். மாநிலங்களவை சிறப்பாகப் பணியாற்றி வருவதை இது காட்டுகிறது.
  • குளிர்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 20 அமர்வுகளில் 108 மணி நேரம் 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 107 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு மாநிலங்களவை ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டது.

உடான் திட்டத்தின் கீழ் ஒடிசாவின் 3 விமான நிலையங்கள் இணைப்பு

  • நாட்டில் உள்ள சிறு நகரங்களை விமானப் போக்குவரத்து வசதி மூலம் இணைப்பது, ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவது, புதிதாக விமான நிலையங்கள் அமைப்பது, சாதாரண  மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு உடான் திட்டத்தை அறிமுகம் செய்தது.
  • இந்த திட்டத்தில் பல்வேறு சிறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒடிசாவின் விமான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஜெய்போர், ரூர்கேலா மற்றும் உத்கேலா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கனவே ஒடிசாவின் ஜார்சுகுடா விமான நிலையம் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. 4 விமான நிலையங்களையும் மேம்படுத்துவதற்கு உடான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூபாய் 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


பிஎஸ்எல்வி இன் 50 ஆவது ராக்கெட்

  • பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ரிசாட் – 2 பிஆர்1 (Risat 2br1) உட்பட 10 செயற்கைகோள்கள் 11.12.2019 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது
  • நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவ நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மூலம் மைக்ரோசாட், எமிசாட், ரிசாட் 2 பி உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன
  • பிஎஸ்எல்வி சி – 48 (PSLV C – 48) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 11.12.2019 அன்று விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடத்தில் 576 கிலோ மீட்டர் தொலைவில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • அடுத்த ஐந்து நிமிடங்களில் வெளிநாடுகளுக்கு சொந்தமான ஒன்பது செயற்கைக் கோள்களும் அதன் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
  • இந்த செயற்கைக்கோளில் உள்ள எக்ஸ்பேண்ட் வகை ரேடார் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் அதிக திறன் கொண்ட படங்களை எடுக்கும்.
  • இதுவரை அனுப்பப்பட்ட  ரிசார்ட் செயற்கை கோள்களில் இதிலுள்ள கேமராக்கள் தான் அதிகபட்சம் 45 சென்டி மீட்டர் அளவுள்ள நிலப்பரப்பை விண்ணிலிருந்து படம்  பிடிக்கும் திறன் கொண்டவை
  • ரிசார்ட்டில் உள்ள 3.6 மீட்டர் ரிப் ஆன்டனா படங்கள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைந்து விரைவாக அனுப்பவும் பெறவும் உதவியாக இருக்கும்
  • சமீபகாலமாக அனுப்பப்படும் செயற்கைகோள்கள் இரட்டை பயன்பாடு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வகைகள் அந்த வகையில் ரிசாட் – 2 பிஆர்1 செயற்கைக்கோள் உதவியால் நாட்டிலே கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த முடியும். இது தவிர புவி வடிவம் நகர்வு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து தகவல் அனுப்பும்.

இந்திய  செயற்கைக்கோள்களை பாதுகாக்க புதிய திட்டம்

  • விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் உள்ளிட்ட இதர அபாயங்களில் இருந்தும் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நேத்ரா என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்திற்கு 33.3 கோடி மானியம் வழங்குவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
  • இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் இதர விண்வெளி சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ரூ.400 கோடி செலவில் மதிப்பீட்டில் நேத்ரா என்ற முன்னெச்சரிக்கை அமைப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது

உலகின் முதல் மின்சார விமானம்

  • வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் மின்சார படகு விமானம் கனடாவின் வான்கூவர் நகரில் 10.12.19 அன்று பறக்கவிடப்பட்டது.
  • கனடாவின் ஹார்பர் ஏர் நிறுவனம், விசிலர் வாசஸ்தல நிறுவனம், அமெரிக்காவின் மேக்னி – எக்ஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக உருவாக்கிய இந்த விமானம் 15 நிமிடங்கள் பறந்தது.
  • ஆறு பேர் அமர்ந்து செல்லக்கூடிய பழைய ஹாவிலன்ட் பீவர் ரக படகு விமானத்தில் மேக்னி – எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட விமானமாகும்.

பொருளாதாரம்


தெற்காசிய நாடுகளில் நடப்பு நிதியாண்டில் இந்தியா குறைவான வளர்ச்சி

  • நடப்பு நிதி ஆண்டில் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தான் குறைவாக இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.
  • கடந்த 2018 ஆம் ஆண்டில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதனால் நிதித் துறையில் ஏற்பட்ட பணப்புழக்க வீழ்ச்சியும் முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் துறை நுகர்வு 4.1 சதவீதமாகவும், தனியார்த் துறை முதலீடு 2.5 சதவீதமாக சரிந்துள்ளது.
  • வேலைவாய்ப்புகள் உருவாக்கத்திலும் பெரிய முன்னேற்றம் இல்லை. கிராமப்புறங்களில் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது என்று கூறியுள்ளது.
  • 2020 – 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்வு 

  • நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இது அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாகவும், 2018 நவம்பர் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
  • உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. உணவு பொருட்களின் விலை 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழல்


ஐரோப்பிய யூனியன் கரியமில மாசு சமநிலை ஒப்பந்தம்

  • வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் தங்களது நாடுகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து நீக்கப்படும் அந்த வாயுவின் அளவையும் சமன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் நாடுகள் 13.12.19 மேற்கொண்டன.
  • அந்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற உறுப்பு நாடான போலந்து மறுத்துவிட்டதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளையாட்டு


மூத்தோர் ஆசிய தடகள  போட்டியில் தங்கம்

  • மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
  • டிசம்பர் 2 முதல் 7 வரை நடைபெற்ற 21 – வது ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற திலகவதி 80 மற்றும் 200 முறை மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவு

  • நேபாள தலைநகர் காத்மாண்டு, பொக்ராவில் 13 – வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 01 முதல் 10 வரை நடைபெற்றது.
  • இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், பூட்டான் உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த 2700 வீரர் – வீராங்கனைகள், 27 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
  • இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளது. 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்களை பெற்றுள்ளது. 2016 போட்டியில் மொத்தம் 309 பதக்கங்களை கைப்பற்றியது.
  • நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என மொத்தம் 206 பதக்கங்களுடன் 2 – வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என 251 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

சர்வதேச கூடைப்பந்து நடுவர்

  • சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் சர்வதேச போட்டிகளுக்கான நடுவர் தேர்வு நடைபெற்றது.
  • தமிழகத்தில் தஞ்சாவூரை சேர்ந்த துரைராஜ் ரமேஷ் குமார் சர்வதேச  கூடைப்பந்து போட்டியின் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021 ஆகஸ்ட் 31 வரை பணியாற்றுவார்.
  • 2006-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற சர்வதேச கூடைப்பந்து போட்டி மற்றும் 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பத்தாவது ஆசிய விளையாட்டு மகளிர் கூடைப்பந்து போட்டிகளில் நடுவராக ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
  • ஆசிய விளையாட்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து இறுதிப் போட்டிக்கு நடுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டின் முதல் இந்திய பெண் நடுவர் 

  • ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக பணி புரிவதற்கு இந்திய பெண் நடுவர் ஜி.எஸ். லட்சுமி முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் 1999 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு தென் மத்திய ரயில்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட இவர் கடந்த 2008 – 09 சீசனில் முதல் பெண்கள் போட்டியில் நடுவராக செயல்பட்டார்.
  • 2019 மே மாதம் சர்வதேச நடுவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் பெண் நடுவர் லட்சுமி அக்டோபரில் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடுவர் ஆவார்.
  • தற்போது முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் – அமெரிக்கா இடையே டிசம்பர் 8ம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லட்சுமி நடுவராக செயல்பட்டார்

ரஷ்யாவிற்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டு தடை

  • கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய வீரர், வீராங்கனைகளின் ஊக்க மருந்து சோதனை மாதிரிகள் குறித்த விவரங்களில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. 2017 இல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஊக்க மருந்து சோதனைகளில் அதிக அளவில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • மாஸ்கோவில் உள்ள ஆய்வகத்தில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் மறைக்கப்பட்டன. இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரிச்சர்ட் மெக்லாரனின் அறிக்கை அரசு உதவியுடன் நடைபெற்ற ஊக்கமருந்து முறைகேட்டை வெளிப்படுத்தியது
  • 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி, 2018 பிரான்சின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என  வாடா அமைப்பு வலியுறுத்தியது இந்த புகார் காரணமாக ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (rusata) மீது 3  மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது
  • 12.2019 அன்று நடைபெற்ற வாடா செயற்குழு கூட்டத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4  ஆண்டுகள் தடைவிதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 17 உறுப்பினர்களில் 9 பேர் ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
  • ஊக்க மருந்து சோதனையில் சிக்காத ரஷ்ய வீரர், வீராங்கனைகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகளில் நடுநிலை அணியாக பங்கேற்கலாம் என வாடா அமைப்பு தெரிவித்துள்ளது

தமிழ்நாடு


100 % பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் தேர்வு

  • மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து அங்கு 100 % மின்னணு பண பரிவர்த்தனையை ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது
  • இதில் தமிழகத்தின் சார்பாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்காக மாநிலம் தோறும் அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் மாநில தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நபார்டு வங்கி, என்.பி.சி.எல் நிறுவனம் மற்றும் முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் இடம் பெறுவர்.
  • விருதுநகர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மின்னணு பணப் பரிவர்த்தனையானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய விருதுகள்


ஆஷ்லி பர்டி

  • உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையாக திகழும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்டி டபிள்யூ டி ஏ ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தின் மூலம் நடைபெற்ற தேர்வில் 82 சதவீதம் பேர் ஆஷ்லி பர்டியை செய்தனர்.
  • சிறந்த புதுமுக வீராங்கனையாக கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருது

  • மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 13ல் நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருதுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
  • பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
  • பேராசிரியா் தி.முருகரத்தினம், பேராசிரியா் சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியா் கு.வெ.பாலசுப்ரமணியம், பேராசிரியா் இரா.மோகன் (மறைவு), பேராசிரியா் ம.திருமலை ஆகியோருக்கு விருதுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். பேராசிரியா் இரா.மோகன் சார்பில் அவரது மனைவி நிர்மலா மோகன் விருதைப் பெற்றுக் கொண்டார்.
  • காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. விருதோடு 1 பவுன் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. இந்த விருது கடந்த 2009-இல் இருந்து பல்வேறு காரணங்களால் வழங்கப்படவில்லை.
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்தலைமையில் தோ்வுக்குழு அமைக்கப்பட்டு 64 தமிழறிஞா்கள் பரிசீலிக்கப்பட்டு 5 தமிழறிஞா்கள் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தமிழறிஞா்களின் சேவைக்கு கிடைத்த வெகுமதி என்றார்.

Share:
error: Content is protected !!